தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே மோதல் - 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருவேறு சமூகத்திற்கிடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

conflict-between-two-communities-5-hospitalized
conflict-between-two-communities-5-hospitalized

By

Published : Nov 30, 2020, 10:11 PM IST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணபேரி பகுதியில், ஒரு சமூகத்தைச் சேர்ந்த 50 குடும்பங்களும், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 15 குடும்பங்களும் இருக்கின்றன. இந்நிலையில் சாலையில் வாகனத்தில் சென்ற ஒரு சமூகத்தினரை, மற்றொரு சமூகத்தினர் சிலர், ஏன் இந்த வழியாக வருகிறாய் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு சமூகத்தினர் கம்பு, இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு, 15 குடும்பங்கள் வசித்து வரும் சமூகத்தைச் சேர்ந்த நபர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த முத்துபாண்டி, பழனியப்பன், ராஜேஷ், பேச்சியம்மாள், பால்செல்வி ஆகிய 5 பேர் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மல்லி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையிலான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:கேர்மாளம் வனச்சாலையில் செல்ல அடையாள அட்டை அவசியம்!

ABOUT THE AUTHOR

...view details