விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே இரு பிரிவினர் சேர்ந்த நான்கு இளைஞர்கள் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து இருபிரிவினரும் கம்பு, கல்லை வைத்து அடித்துக்கொண்டதில் இருவருக்கு மண்டை உடைந்தது. அவர்கள் பலத்த காயங்களுடன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரு பிரிவினருக்கும் மோதல் ஏற்பட்டதை அடுத்து ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே துணை காவல் கண்காணிப்பாளர் நாகஷங்கர் தலைமையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்த ஒரு பிரிவினரை சேர்ந்தவர்கள் தங்களை தாக்கி அடித்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், இல்லையென்றால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.