ஸ்ரீவில்லிப்புத்தூர் : முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆவின், அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்த ஹரிபாலு, கார்த்திக்குமார், குணா தூய மணி, வெங்கடாசலம், மீனாட்சி சுந்தரம், செல்வராஜ், ஜோசப் ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தனித்தனியாக சம்மன் அனுப்பப்பட்டது.