விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் தனியார் கல்லூரியில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் அதேபகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
அந்தப் பெண் சில நாள்களாக அந்த இளைஞரிடம் பேச மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவர் இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வெம்பக்கோட்டை காவல் துறையினர் உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இவர் தற்கொலை செய்வதற்கு முன்பு வெளியிட்ட வீடியோவை அடிப்படையாக வைத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் முன்னதாக டிக் டாக் செயலியில் பல்வேறு வீடியோக்கள் பதிவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.