தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதாம் என ஆமணக்கு விதையை சாப்பிட்ட சிறுவர்கள்!

பாதாம் பருப்பு என நினைத்து காட்டு ஆமணக்கு விதையை சாப்பிட்ட 2 சிறுமிகள் உள்பட 7 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

மருத்துவமனையில் அனுமதி
மருத்துவமனையில் அனுமதி

By

Published : Jul 16, 2021, 2:15 PM IST

விருதுநகர்:நரிக்குடி அருகே உள்ள இருஞ்சிறை கிராமத்தை சேர்ந்த 14 வயதிற்குள்பட்ட பள்ளி மாணவர்களான ஜெயதர்சினி, சத்யபிரியா, பாலாஜி, சரவணன், கவின், கதிர், பொன் முகேஷ் உள்ளிட்ட சிறுவர்கள் நேற்று (ஜூலை 15), பள்ளியின் பின்புறம் உள்ள செடியின் காய்களை பிடுங்கி அதில் உள்ள விதைகளை பாதாம் பருப்பு என்று நினைத்துத் தின்றுள்ளனர்.

இந்நிலையில் சிறுவர்களுக்கு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குழந்தைகளின் பெற்றோர் அவர்களிடம் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டபோது, பள்ளிக்கு பின்னால் இருக்கும் செடிகளை காண்பித்து அதிலுள்ள பருப்புகளை தின்றதாக கூறியுள்ளனர்.

அந்த செடியின் விதை காட்டு ஆமணக்கு விதையாகும். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தும் நீண்ட நேரம் ஆம்புலன்ஸ் வராததால், பெற்றோர் தங்களது குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து, இரு சிறுமிகள் உள்பட 7 பேரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: விபரீதம் ஆன வேடிக்கை- திபுதிபுவென கிணற்றுக்குள் விழுந்த 40 பேர்!

ABOUT THE AUTHOR

...view details