தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“ஸ்டாலின் வாராரு விடியல் தரப் போறாரு” - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிகழ்ச்சியில் பாடிய சிறுவர்கள்! - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர்: சிவகாசியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் “ஸ்டாலின் வாராரு விடியல் தரப் போறாரு” என சிறுவர்கள் பாடிய பாடலால் அங்கு சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அதிமுக நிகழ்ச்சியில் திமுக பாடல் பாடிய சிறுவர்கள்
அதிமுக நிகழ்ச்சியில் திமுக பாடல் பாடிய சிறுவர்கள்

By

Published : Feb 18, 2021, 9:15 PM IST

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தனது சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி, அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் மினி கிளினிக் திறப்பு விழா, உயர் கோபுர மின் விளக்குகள் தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், சிவகாசியில் இன்று (பிப்.18) நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் வருகை தந்தார். அப்போது, அவருக்கு பட்டாசுகள் வெடித்து, வேல் வழங்கி வரவேற்பு கொடுக்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றிருந்த வேளையில், அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தாங்களாகவே தயாரிக்கப்பட்ட கொட்டுகள் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அதிமுக நிகழ்ச்சியில் திமுக பாடல் பாடிய சிறுவர்கள்

அப்போது, அந்த சிறுவர்கள் “ஸ்டாலின் வாராரு விடியல் தரப் போறாரு” என்ற பாடலை பாடி முழக்கமிட்டு கொட்டடித்தனர். இதனைக் கண்ட அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: கோயபல்ஸ் போல பரப்புரை செய்கிறார் ஸ்டாலின் - அமைச்சர் ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details