விருதுநகர்:கன்னியாகுமரி மாவட்டம் ஆமணக்குவிளை பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான லிங்கேஸ் (36) மற்றும் சதீஷ் (34), சென்னை ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊரான ஆமணக்குவிளையில் உள்ள கோயிலில் குழந்தைக்கு முடி காணிக்கை செய்வதற்கு தங்களது காரில் சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில், சாத்தூர் அருகே பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து உருண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் லிங்கேஷ் என்பவரது மகள் லியா ஆதிரா என்ற மூன்று வயது குழந்தை தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்ததுள்ளது. மேலும் லிங்கேஸ் மற்றும் சதீஷ் இருவருடைய மனைவிகள் மற்றும் இரண்டு குழந்தைகள் என நான்கு பேருக்கு படுகாயமடைந்துள்ளனர்.