ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு பகுதியில் அரசின் சார்பில் ரூ.1 கோடி, சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய போக்குவரத்து பணிமனை கட்டடம் கட்டப்பட்டது. இதனை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
புதிய போக்குவரத்து பணிமனை கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்! - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய போக்குவரத்து பணிமனை கட்டடத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
புதிய போக்குவரத்து பணிமனை கட்டடம் திறப்பு
இதைத் தொடர்ந்து இப்பணிமனையில் வத்திராயிருப்பு ஒன்றிய பெருந்தலைவர் சிந்து முருகன் குத்துவிளக்கு ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் அதிமுகவின் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்தையா, நகர செயலாளர் வைகுண்ட மூர்த்தி, கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மதுரை இராசாசி மருத்துவமனையில் ரூ.121 கோடியில் புதிய கட்டடத்திற்கு அடிக்கல்!