சென்னையைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் சொந்தமாக கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடன் 21 பேர் கொண்ட குழுவினர் ‘ஒரே நாடு ஒரே கொடி’ என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மோட்டர் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
’ஒரே நாடு ஒரே கொடி’ வலியுறுத்தி சென்னை ஆசிரியை குமரி-காஷ்மீர் பயணம்! - சென்னை ஆசிரியை குமரி-காஷ்மீர் வரை பயணம்
விருதுநகர்: ‘ஒரே நாடு, ஒரே கொடி’ என்பதை வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சென்னை ஆசிரியை மோட்டர் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
’ஒரே நாடு ஒரே கொடி’ வலியுறுத்தி சென்னை ஆசிரியை குமரி-காஷ்மீர் வரை பயணம்!
ஆகஸ்ட் 15ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம், இன்று விருதுநகர் வந்தடைந்தது. அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த பயணம் 20 மாநிலங்கள் வழியாக 5,200 கிலோமீட்டர் தொலைவு கடந்து செப்டம்பர் ஒன்றாம் தேதி ஸ்ரீநகரில் முடிவடைகிறது.