தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெகுவிமர்சையாக நடந்த ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் - chariot

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.

தேரோட்டம்

By

Published : Aug 4, 2019, 8:49 PM IST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் பிரசிதிப்பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பூரத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டிற்கான ஆடிப்பூர தேரோட்ட விழா ஜூலை 28ம் தேதி தொடங்கியது. இவ்விழாவில் தினமும் ஆண்டாள்- ரெங்கமன்னார் வீதி உலா நடைபெற்று வருகிறது.

மக்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் தேர்

இந்நிலையில், ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்றுகாலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிந்தா கோவிந்தா என்ற கோஷம் விண்ணை முட்ட பக்தி பரவசத்தோடு பெண்கள், ஆண்கள் அனைவரும் தேரை இழுத்தனர். ஆடிப்பூரம் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டள்ளது.

ABOUT THE AUTHOR

...view details