விருதுநகர்: அருப்புக்கோட்டையில் பல்வேறு சங்கிலி பறிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் 5 பேர் கைது செய்து குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டையில் கடந்த சில மாதங்களாக எஸ்பிகே ஸ்கூல் ரோடு, பெர்கின்ஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத வீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து பல்வேறு சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன.
அடுத்தடுத்து நடைபெற்ற சங்கிலி பறிப்பு சம்பவங்களை தொடர்ந்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவுப்படி நகர் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜபுஷ்பா தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.