விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் லிங்கம் வீட்டின், இல்ல திருமண விழாவில் சிபிஐ கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மேயர், உள்ளாட்சி, "பேரூராட்சி தேர்தலில் தலைவர்களுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என்று அதிமுக அரசு அறிவித்திருப்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலை. ஆட்சி அதிகாரம், பண பலம், படை பலத்தை கொண்டு உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களையும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி எப்படி வெற்றி பெற்றதோ! அதே போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் அதே கூட்டணி மகத்தான வெற்றி பெறும். ரஜினிகாந்த் கூறியது போல 2021இல் அதிசயம் நிகழும். அது, அதிமுக அரசு அகற்றப்படக்கூடிய அதிசயமாக இருக்கும்.