தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையின் நடுவே பற்றி எரிந்த கார்; நல்வாய்ப்பாக உயிர் பிழைத்த ஓட்டுநர்! - விருதுநகர் அண்மைச் செய்திகள்

விருதுநகர்: சாத்தூர் அருகே சாலையின் நடுவே சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதில் நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.

சாலையின் நடுவே பற்றி எரிந்த கார்
சாலையின் நடுவே பற்றி எரிந்த கார்

By

Published : Apr 2, 2021, 8:59 PM IST

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே புல்லக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் குமரேசன் (29). இந்நிலையில் இன்று (ஏப்ரல் 2) இவர் தனது ஸ்கார்பியோ காரை எடுத்துக்கொண்டு சாத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருக்கும்போது திடீரென காரிலிருந்து புகை கிளம்பியது. இதனால் பதற்றமடைந்த குமரேசன், உடனடியாக காரை நிறுத்தி, வெளியில் வந்து தீயை அணைக்க முயற்சி செய்தார்.

ஆனால், தீ கட்டுக்கடங்காத காரணத்தால் சாத்தூர் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

சாலையின் நடுவே பற்றி எரிந்த கார்

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து சாத்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:நெருக்கடி நிலையை எதிர்கொண்டவர்கள் திமுகவினர் - ஆர்.எஸ். பாரதி

ABOUT THE AUTHOR

...view details