மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த மூன்று பேர் குற்றாலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் சென்று கொண்டிருந்த கார் அதிகாலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நத்தம்பட்டியில் எதிரே வந்த இரண்டு கார்களுடன் அடுத்தடுத்து மோதிக் கொண்டது. இதில் நிகழ்விடத்திலேயே காரில் பயணம் செய்த யாஷிப், முகமது பிலால் ஆகியோர் உயிரிழந்தனர்.
குற்றலாத்திற்கு சென்றவர்கள் கார் விபத்தில் பலி! - இருவர் பலி
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடுத்தடுத்து மூன்று கார்கள் மோதிய விபத்தில் இருவர் உயரிழந்தனர்.
accident
மேலும், ஆறு பேர் லேசான காயங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து நத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.