விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள கோணம்பட்டி விலக்கில் சாத்தூரிலிருந்து சிவகாசி செல்லும் சாலையில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் கீழ ஒட்டம்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் அய்யனார் (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த அய்யனாரின் உறவினர்கள் விபத்துக்கு காரணமான பேருந்து கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
பைக் மீது பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு - சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழப்பு
விருதுநகர்: இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சாத்தூர் மற்றும் சிவகாசி காவல் துறையினர் விரைந்து வந்து பேருந்தை சேதப்படுத்திய உறவினர்களை கலைத்து அனுப்பினர். மேலும் உயிரிழந்தவர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்கு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்துக்குள்ளான பேருந்து மற்றும் இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநரான இரவார்பட்டியைச் சேர்ந்த விசுவாசம் என்பவரது மகன் மாணிக்கம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.