விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ரயில்வே மேம்பாலம் அருகில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாய் ஒன்று செல்கிறது. இந்த குழாய் மூலம் டவுன் பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது.
தாமிரபரணி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு - சரிசெய்ய கோரிக்கை - water pipe demage
விருதுநகர்: ரயில்வே மேம்பாலம் அருகே செல்லும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்யக் கோரி சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தாமிரபரணி கூட்டுகுடிநீர் குழாயில் உடைப்பு
இந்நிலையில், தற்போது கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர்வீழ்ச்சி போன்று தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் டவுன்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகத்தினர் விரைந்து குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.