விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் அருகே தவசி லிங்கபுரம் கிராமத்தில் பொன்னையா என்பவரது விவசாயக் கிணற்றில் ஆண் உடல் ஒன்று மிதந்துள்ளது. அதனைத் தொடர்ந்து உடனடியாக இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல், தீயணைப்புத் துறையினர் கிணற்றிலிருந்து உடலை மீட்டனர்.
ஆமத்தூர் அருகே கிணற்றில் மிதந்த ஓட்டுநரின் உடல் மீட்பு!
விருதுநகர் : ஆமத்தூர் அருகே கிணற்றில் மிதந்த ஓட்டுநரின் உடலை மீட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆமத்தூர் அருகே கிணற்றில் மிதந்த ஓட்டுநரின் உடல் மீட்பு!
பின்னர் காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்து கிடந்தவர் நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த கருப்பசாமி (42) என்பது தெரிய வந்தது. இவர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் கருப்பசாமியின் உயிரிழப்புக்கு காரணம் கொலையா, தற்கொலையா எனவும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : ’காத்திருந்தால் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கு அப்பாவு உதாரணம்’ - குவியும் வாழ்த்துகள்