விருதுநகர்:சுதந்திர இந்தியாவின் 75 ஆவது ஆண்டு பவளவிழாவை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவு இடங்களுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு இல்லத்திற்கு, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சென்று காமராஜரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியை மையமாக வைத்து பட்டாசு தொழில் வாழ்வாதமாக உள்ளது. சமீபத்தில் பட்டாசு தொழிலில் ஏற்பட்டு வரும் விபத்துக்கள் புதிதாக கொண்டு வரப்பட்ட சட்டங்களால் பட்டாசு தொழில் நசிந்து விட்டது. இதற்கு அரசு நிரந்தர தீர்வு காண அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும்.