விருதுநகர்: அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் விருதுநகரில் போட்டியிடும் பாண்டுரங்கனுக்கு ஆதரவாக எம்ஜிஆர் சிலை அருகே நடிகை நமீதா நேற்று (மார்ச் 27) பரப்புரை மேற்கொண்டார்.
நமீதா பரப்புரை கூட்டத்தில், 'தாமரை மலராது' என்று கோஷமிட்டவர் மீது தாக்குதல்! - தாமரை மலராது என்று கோஷமிட்டவரை தாக்கிய பாஜகவினர் நமீதா பரப்புரையில் சலசலப்பு
நடிகை நமீதாவின் பரப்புரை கூட்டத்தில் கேள்வி எழுப்பியவரை பாஜகவினர் சராமாரியாக தாக்கியுள்ளனர்.
bjp-volunteers-attacked-person-who-chanted-against-bjp-in-nameetha-campaign-at-virudhunagar
அப்போது அதிமுக, பாஜக அரசின் திட்டங்களை எடுத்துரைத்து தமிழ்நாட்டில், “தாமரை மலரும்” எனக் கூறி பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர் தாமரை தமிழ்நாட்டில் மலராது என எதிர்ப்பு முழக்கமிட்டதால் அவரை பிடித்து பாஜவினர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட நபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:தீவிர வாக்கு சேகரிப்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி