விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது இந்த குழு கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாஜக தலைவர் அண்ணாமலை 'காமெடி பீஸ்' - மாணிக்கம் தாகூர் விமர்சனம் - மாணிக்கம் தாகூர் பேட்டி
வைகை புயலுக்கு பின் நமக்கு பொழுதுபோக்கு பாஜக தலைவர் அண்ணாமலைதான் என விருதுநகரில் எம்.பி மாணிக்கம்தாகூர் கூறுனார்.
இந்தக் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்
"புதிய அரசு அமைந்து முதன்முறையாக திசா கூட்டம் நடைபெற்றுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் திசா கூட்டத்தில் மாநில அமைச்சர்கள் கலந்துகொள்வதில்லை. ஆனால் தற்போது இரண்டு அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டதும் 22 துறை சம்பந்தமான பிரச்சனைகளை ஆய்வு செய்தது மாற்றத்திற்கான ஒரு பகுதியாக பார்க்கிறேன்.
விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் அளிக்கப்பட்ட எந்தவித ஒப்பந்தங்களும் முறையாக நடக்கவில்லை எனவும் அப்படி முறையாக நடைபெறாத ஒப்பந்ததாரர்களை தடை செய்து அடுத்தப் எந்தவித பணிகளும் வழங்கக்கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்துள்ளேன்.
அண்ணாமலை உள்ளே என்ன பேசுகிறார், வெளியே என்ன பேசுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அவருடைய அரசியல் பார்வையும் அவருடைய பேச்சும் மிகுந்த சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. நான்கு என்பது எட்டு ஆகுமா இல்லை 150 ஆகுமா இல்லை மீண்டும் பழைய பழைய நிலைக்கே திரும்புமாமா என தெரியவில்லை. அவர்களுடைய கனவு கனவாகவே இருக்கட்டும்.
அண்ணாமலை பேசியதை சீரியசாக எடுத்துக்கொண்டால் அது நமக்கு காமெடியாக போய்விடும். வைகைப் புயலுக்கு பின்னால் நமக்கு ஒரே பொழுதுபோக்கு அண்ணாமலை மட்டும்தான். அண்ணாமலையை விட்டுத்தள்ளுங்கள், அவர் ஒரு காமெடி பீஸ்" என விமர்சித்துள்ளார்.