தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு: வீட்டு வாசல்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்! - விருதுநகர் அண்மைச் செய்திகள்

விருதுநகர்: நாளை முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில், தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கறுப்புக் கொடி ஏந்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

By

Published : Jun 13, 2021, 2:52 PM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த இரண்டு மாதங்களாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொற்று எண்ணிக்கை ஓரளவு கட்டுக்குள் வந்ததையடுத்து, நாளை (ஜூன்.14) முதல் கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து அரசு, தனியார் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன. இதனைக் கண்டித்து விருதுநகரில் அழகர் சாமி தெரு, ஆர் எஸ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில், பாஜக நிர்வாகிகள் தங்கள் வீட்டு வாசல் முன்பு கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதையும் படிங்க : தடுப்பூசி பற்றாக்குறைக்கு அதிமுக அரசே காரணம்- மாணிக்கம் தாகூர்

ABOUT THE AUTHOR

...view details