கோவில்பட்டி, கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் இடி,மின்னலுடன் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்ததது. இரவு நேரத்திலும் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்ததது. மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இந்த சூறைக்காற்றுக்கு கோவில்பட்டி அருகேயுள்ள முடுக்கலான்குளம் கிராமத்தில் பல விவசாயிகளின் நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தது.
கோவில்பட்டி அருகே சூறாவளிக் காற்றில் சரிந்த வாழைமரங்கள் - வாழைமரங்கள் நாசம்
விருதுநகர்: கோவில்பட்டி பகுதியில் வீசிய சூறாவளிக்காற்றில் வாழைமரங்கள் சரிந்து விழுந்ததால், விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
![கோவில்பட்டி அருகே சூறாவளிக் காற்றில் சரிந்த வாழைமரங்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-3098104-thumbnail-3x2-banana.jpg)
சூறாவளிக் காற்றால் வாழைகள் சேதம்
முடுக்கலான்குளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ள நிலையில், பல லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் காற்றில் சாய்ந்து சேதமடைந்துள்ளன.
இதேபோன்று செட்டிகுறிச்சி சுற்றியுள்ள பல கிராமங்களிலும் வாழைமரங்கள் சேதமடைந்துள்ளன.