விருதுநகர்:சாத்தூர் எஸ்.ஆர். நாயுடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சத்தூர் நகர ஒன்றியப் பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகளுக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் விருதுநகர் மாவட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று (டிசம்பர் 10) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு வளைகாப்புச் சீதனம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்
விழாவில் பேசிய கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். பெண் குழந்தைகள் பல்வேறு துறைகளில் தற்போது முன்னேறிச் செல்கின்றனர்" என்றார்.