தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலன் செயலி குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி - Awareness training for college students on kavalan app

விருதுநகர்: போக்குவரத்துக் காவல் துறையினர் சார்பில் காவலன் செயலி குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது.

காவலன் செயலி குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி!
காவலன் செயலி குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி!

By

Published : Feb 13, 2020, 9:44 AM IST

விருதுநகரில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட காவல் துறையினர் சார்பில் போக்குவரத்துக் காவல் சார்பு ஆய்வாளர் மரிய அருள் தலைமையில் காவலன் செயலி பதிவிறக்கம் செய்தல், அதனைப் பயன்படுத்தும் விதம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் சாலைப் பாதுகாப்பு, சாலை விதிகள் போன்றவற்றை குறித்த சிறப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

இவ்விழிப்புணர்வு பயிற்சியில் காவலன் செயலியின் மூலம் ஆபத்து நேரங்களில் எவ்வாறு உதவியைப் பெறுவது என்பது குறித்து மாணவிகளுக்கு நேரடி விளக்கம் வழங்கப்பட்டது. இதில் போக்குவரத்துக் காவல் துறையினர், கல்லூரி மாணவிகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

காவலன் செயலி குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி

இது குறித்து மாணவி ஒருவர் கூறுகையில், “இந்த விழிப்புணர்வு பயிற்சி ஆபத்துக் காலங்களில் எங்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு எளிதாக உதவியைப் பெற பயனுள்ளதாக இருக்கும். மேலும் சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்த தெளிவான ஆலோசனைகளும் பெற முடிந்தது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...'காவலன் SOS' செயலிக்கு காவல் துறையின் தெறிக்கவிடும் மீம்ஸ்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details