விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மறைமுக உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் சமமான வாக்குகள் பெற்றதால் இரு கட்சி தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். மோதலை தடுக்க துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் முயற்சி செய்தபோது நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.