தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதவி வேளாண் அலுவலர் தற்கொலை: காவல் துறை விசாரணை! - தற்கொலை செய்துகொண்ட உதவி வேளாண் அலுவலர்

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே வேளாண்மை துறை அலுவலகத்தில் உதவி வேளாண் அலுவலராக பணிபுரிந்த பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட உதவி வேளாண் அலுவலர்
தற்கொலை செய்துகொண்ட உதவி வேளாண் அலுவலர்

By

Published : May 22, 2020, 2:21 PM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வடக்கு சிவஞானபுரம் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி மதிராணி(29). இவர்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது விக்னேஸ்வரர் (6). ஜெயஸ்ரீபத்ரா (3) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அருண்குமார் ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கட்டுமான பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். மதிராணி ரெட்டியாபட்டி வேளாண்மை துறை அலுவலகத்தில் வேளான் உதவி அலுவலராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு தனது மகள் ஜெயஸ்ரீபத்ராவின் பிறந்தநாளை உறவினர்களுடன் கேக் வெட்டி, பிரியாணி விருந்தோடு கொண்டாடிவிட்டு தனது அறையில் தூங்கச்சென்ற மதிராணி, காலை வெகு நேரமாகியும் வெளியில் வரவில்லை.

இதனால், சந்தேகமடைந்த உறவினர்கள் அவரது அறையின் ஜன்னல் வழியாக பார்த்தபோது, மதிராணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர், மதிராணியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மதிராணி, அவர் பணிபுரிந்த அலுவலகத்தின் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது குடும்பத்தில் ஏதேனும் பிரச்னையா? என்ற கோணங்களில் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்

ABOUT THE AUTHOR

...view details