தமிழ்நாடு அரசு, கடந்த ஜூலை 5-ஆம் தேதி தனியார் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சைக்கு வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்து உத்தரவிட்டிருந்தது, இருப்பினும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனை கண்காணிக்கக் குழு அமைக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
தனியார் மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சை அனுமதி ரத்து! - கரோனா தொற்று
விருதுநகர்: கரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சிட்டி (தனியார்) மருத்துவமனை அதிக கட்டணம் வசூலிப்பதாக கரோனா சிகிச்சை பெற்று வந்து நபரால் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கண்காணிப்பு குழுவினர் அருப்புக்கோட்டை சிட்டி(தனியார்) மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் கரோனா சிகிச்சை பெற்ற நோயாளியிடம் இருந்து ரூபாய் 7 லட்சத்து 40 ஆயிரம் வசூலிக்கப்பட்டது உறுதியானது. இதனால் அருப்புக்கோட்டையில் உள்ள சிட்டி (தனியார்) மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அரசின் அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்து, மாவட்ட ஆட்சியர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.