விருதுநகர்:அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி பசும்பொன் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு 4 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆறுமாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் உடனடியாக குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று (ஜூன் 21) போராட்டம் நடத்தினார்கள்.