விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியை சேர்ந்தவர் சரத்குமார்(32) கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியம்மாள் தம்பதிக்கு சந்திரமணி(7), சித்தார்த்(8) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சந்திரமணி அருகில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பும், சித்தார்த் நான்காம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று(நவ.08) பள்ளி முடிந்ததும் சந்திரமணி மற்றும் சித்தார்த் இருவரும் அருகிலுள்ள பாப்பாவி நீராவியில் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. குளிக்கச் சென்ற இருவரும் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவர்களை பல இடங்களில் தேடி உள்ளன.
அப்போது நீராவி நீரில் சித்தார்த் சடலமாக மிதப்பதாக அங்கு இருந்தவர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு சென்று சித்தார்த்தை வெளியே கொண்டு வந்தனர். மேலும் சந்திரமணியை காணாமல் தேடிய போது அவரது கால் மட்டும் வெளியே தெரிந்துள்ளது.