கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை சாதகமாக பயன்படுத்தி தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக அந்தந்த மாவட்ட காவல் துறையினருக்கு பொதுமக்கள் புகார்கள் அளித்து வந்தனர். அதன்படி காவல் துறையினரும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்துவருகின்றனர்.
அந்தவகையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள கணபதி சுந்தர நாச்சியார்புரம் பகுதியில் ஒருவர் கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.