தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி வாக்காளர் அடையாள அட்டை மூலம் நில மோசடி: 6 பேர் கைது - விருதுநகர் மாவட்ட செய்திகள்

விருதுநகர்: போலி வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி 46 ஏக்கர் நிலத்தை 50க்கும் மேற்பட்டோருக்கு விற்பனை செய்த ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

போலி வாக்காளர் அடையாள அட்டையை வைத்து நிலம் மோசடி
போலி வாக்காளர் அடையாள அட்டையை வைத்து நிலம் மோசடி

By

Published : Apr 14, 2021, 4:49 PM IST

சென்னையைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் தனது மனைவி உண்ணாமலையின் பெயரில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் 1994ஆம் ஆண்டு 46 ஏக்கர் நிலத்தை வாங்கினார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் தியாகராஜனுக்கு தான் வாங்கிய நிலம் மேலும் பலருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தினர்.

போலி வாக்காளர் அடையாள அட்டையை வைத்து நிலம் மோசடி

அதில் காரியாபட்டியைச் சேர்ந்த ஆதிமூலம், கள்ளிக்குடியைச் சேர்ந்த விஜயகுமார் ஆகிய இருவரும் மணிமுருகன் என்ற இடைதரகர் மூலம் போலி வாக்காளர் அடையாள அட்டையைத் தயார் செய்து, 46 ஏக்கர் நிலத்தை கடந்த மூன்று ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து நில மோசடியில் ஈடுபட்ட விஜயகுமார், ஆதிமூலம் உள்ளிட்ட ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் போலி சாட்சிக் கையெழுத்திட்ட மதுரையைச் சேர்ந்த மகாதேவன், கார்த்திகேயன் ஆகிய இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: போலி ஆவணங்கள் மூலம் ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த மூவர் கைது

ABOUT THE AUTHOR

...view details