விருதுநகர்:வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் வடகரையில் உள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்து மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பு அகழாய்வு மூலம் இந்த தொல்லியல் மேட்டில் முன்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் முதல்கட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன.
சுடுமண்ணாலான பகடைக்காய்-அகழ்வாய்வில் வெளிவந்த அதிசயம்..! - பகடைக்காய் உள்ளிட்டப் பொருட்கள் கண்டுபிடிப்பு
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சுடுமண் பகடைக்காய், தக்கழி, ஆட்டக்காய் உள்ளிட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
![சுடுமண்ணாலான பகடைக்காய்-அகழ்வாய்வில் வெளிவந்த அதிசயம்..! அகழ்வாராய்ச்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15076560-thumbnail-3x2-vnr8.jpg)
இதன் மூலம், முற்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த தொன்மையான மனிதர்கள் கலைநயம் மிக்கவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை அறிய முடிவதாக தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, கடந்த சில வாரங்களுக்கு முன்பு முத்து மணிகள், சங்கு வளையல்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலும் சில தொன்மையான பொருட்கள் கிடைத்துள்ளது தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விருதுநகரில் கி.பி 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரை கோவில் கண்டுபிடிப்பு!