விருதுநகர்:சங்கரலிங்கபுரம் அருகே கட்டனார்பட்டியில் 76ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். இக்கிராமசபைக்கூட்டத்தில் ஊராட்சிப் பகுதியில் நடைபெற்ற பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும் நடைபெறவிருக்கும் பணிகள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கட்டனார்பட்டி கிராம ஊராட்சி பகுதியைச்சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கு பின்பு செய்தியாளர்களைச்சந்தித்த மாணிக்கம் தாகூர், “இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகி அரசு துறைகளில் பல்வேறு மாற்றத்தினை பெற்றாலும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குவதற்கு கிராமப்புறங்கள் தான் முக்கியப்பங்கு வகிக்கிறது.
இலங்கையில் ராஜபக்ச அரசு சீனாவிடம் அடகு வைத்ததால் தான் இலங்கை இவ்வாறான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ராஜபக்சவின் இனவாத வெறுப்பு அரசியலும் சீனாவிற்கு அடிமையாகப்போனதால் தான் இலங்கை இப்படிப்பட்ட சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சீனா - இலங்கை உறவு என்பது இலங்கையை அழிப்பதற்கான உறவாக நாங்கள் பார்க்கிறோம். ஆகையால் இந்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.