விருதுநகர்:ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து காவல் துறையினர் முக்கியமான பகுதிகளில் நாள்தோறும் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்துச் சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் தர்மராஜ் (49) நேற்று முன்தினம் (ஜனவரி 2) வடக்கு ரத வீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மடத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன உணவு டெலிவரி ஊழியர் வெங்கடேஷை (29) சோதனைசெய்தனர். அவரிடம் ஆவணங்கள் சரியாக இல்லாததால் தர்மராஜ் 600 ரூபாய் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. அபராதம் விதித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் தர்மராஜிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் அபராத தொகையைச் செலுத்துவதாகக் கூறி, தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் தர்மராஜை கொலைசெய்ய முயற்சித்துள்ளார். சுதாரித்துக்கொண்ட தர்மராஜ் அவரைத் தடுத்துள்ளார்.