விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 700க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று (பிப்.22) முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றுவேன் என்று அறிவித்ததை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு முறையான வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது அங்கன்வாடி ஊழியர்களுக்குப் பணிக்கொடையாக 10 லட்சம் ரூபாயும், உதவியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.