விருதுநகர்:சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து டாடா ஏசியில் 20க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர்.
வாகனத்தை ஓட்டுநர் சுந்தரமூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இதில், 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட 8 மாத குழந்தை கபிலீஸ் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், ஆபத்தான நிலையில் உள்ள ஓட்டுநர் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருவள்ளூரில் மாணவி தற்கொலை சம்பவம்: மீண்டும் தொடங்கிய வகுப்புகள்