விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் சாத்தூர் அருகே பரப்புரையில் ஈடுபட்டார். பின்னர், ஏழாயிரம்பண்ணையில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராஜவர்மன், “தமிழ்நாட்டில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரண்டு லட்சம் கோடி சொத்து சேர்த்து வைத்துள்ளார்” என்றார்.
அமைச்சர்களுக்கு சவால் விடுத்த அமமுக வேட்பாளர் - tn assmbly news
விருதுநகர்: "அனைத்து அமைச்சர்களும் தனது சொத்துப் பட்டியலை வெளியிடத் தயாரா?" என சாத்தூர் அமமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் சவால் விடுத்துள்ளார்.
அமைச்சர்களுக்கு சவால் விடுத்த அமமுக வேட்பாளர்!
இதனையடுத்து, 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜவர்மன் வெற்றி பெற்று சொத்து சேர்ததாக அமைச்சர் குற்றஞ்சாட்டியதற்கு பதிலளித்த ராஜவர்மன், “அவ்வாறு நான் சொத்து சேர்த்ததாக நிரூபித்தால் அனைத்து சொத்துகளையும் தொகுதி மக்களுக்காக எழுதி வைக்கிறேன். அதுமட்டுமின்றி அனைத்து அமைச்சர்களும் தங்களது சொத்துப் பட்டியலை வெளியிடத் தயாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க...ELECTION BREAKING: வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு