தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’மதிமுக நம் எதிரியே இல்லை’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர்: எதிர்வரும் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ராஜவர்மனுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்; மதிமுக நமக்கு எதிரியே இல்லை என பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

By

Published : Mar 20, 2021, 6:39 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக தேர்தல் பணிக்கான கட்சி அலுவலகத்தை தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

தொடர்ந்து இவ்விழாவில் அவர் பேசியதாவது:

சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் ரவிச்சந்திரன், அதிமுக முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர். இவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.

திமுக சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் நமக்கு எதிரியே இல்லை. துரோகியாகக் களமிறங்கியுள்ள அமமுக வேட்பாளர் ராஜவர்மனுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

ராஜவர்மன் மற்றவர்களை வாழவிடாமல் கெடுக்கும் குணம் உள்ளவர். அவரை எக்காலத்திலும் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது. சாத்தூர் தொகுதியில் எண்ணற்ற நலத்திட்ட பணிகளை அமைச்சராக இருந்து நான் செய்துகொடுத்தேன்.

இந்த சாத்தூர் பகுதியை வளர்ச்சியான பகுதியாக மாற்ற அதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரனுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நகர ஒன்றியக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:'வெல்லப்போவது இரட்டை இலைதான்; அதுவும் அதிக வாக்கு வித்தியாசத்தில்...!'

ABOUT THE AUTHOR

...view details