ராஜபாளையம் பகுதியில் முதல் கரோனா தொற்றாக முன்னாள் அரசு மருத்துவரின் கணவர் குருசாமி என்ற முதியவர் கண்டறியப்பட்டார். இவர் ஆரம்பகட்டத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்ததன் விளைவாக அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் என 62 நபர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனைசெய்யப்பட்டது.
அத்தியாவசிய கடைகளை மூடிய மாவட்ட நிர்வாகம் இந்தப் பரிசோதனையில் சிகிச்சைப் பெற்ற தனியார் மருத்துவமனையின் மருத்துவர், ஆய்வக நுட்பனர், செவிலியர் உள்பட நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யபட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
இந்நிலையில் பொதுமக்களுக்கு எந்த ஒரு அடிப்படை முன்னறிவிப்புமின்றி மாவட்ட நிர்வாகம், கரோனா கண்காணிப்பு அலுவலர்கள் காய்கறிக் கடைகள், அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் கடைகளை திடீரென மூடச் செய்ததால் இப்பகுதி மக்களின் வாழ்க்கை நிலை குலைந்தது.
மேலும் பொதுமக்கள் வெளியில் வராமல் முக்கியச் சாலைகளில் காவல் துறையினர் தடுத்தி நிறுத்தியுள்ளனர். இதனால் சாலைகள் வெறிச்சோடின. ஊரடங்கு என்ற பெயரில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையைக்கூட உறுதிப்படுத்தாமல் மாவட்ட நிர்வாக அலுவலர்களின் இத்தகைய செயல் அரசின் விதிகளுக்குப் புறம்பாகவும், அவப்பெயரை ஏற்படுத்தும்விதமாகவும் உள்ளது.
இதையும் படிங்க: கருணை காட்டாத காவலர்கள்... ஒரு கி.மீ. தூரம் தந்தையை தோளில் சுமந்த மகன்