விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான அத்திகோவில் பகுதியில் சுமார் 10க்கு மேற்பட்ட பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன. நேற்றிரவு (பிப்.16) அப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள் சுமார் 8க்கும் மேற்பட்டோர் மது போதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ஏற்பட்ட தகராறில் சகோதரர்களான முத்தையா, முத்துப்பாண்டி ஆகிய இருவரை 5 பேர் சேர்ந்த கும்பல் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் சகோதரர்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், படுகாயமடைந்தவர்களை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.