தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக மாஜி எம்.பி ராதாகிருஷ்ணன் மரணம்: சசிகலா இரங்கல்! - AIADMK former Member of Parliament T Radhakrishnan

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 67.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 12, 2022, 7:56 AM IST

சிவகாசி:விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ராதாகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டிட்டு வெற்றி பெற்றவர் டி.ராதாகிருஷ்ணன், 30 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவில் இருக்கும் அவர், தற்போது விருதுநகர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென நெஞ்சுவலி(மாரடைப்பு) காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னாள் எம்.பி., டி.ராதாகிருஷ்ணன் மறைவுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சசிகலா, "மக்களவை முன்னாள் உறுப்பினரும், விருதுநகர் மேற்கு மாவட்டக் கழக துணைச் செயலாளருமான T.ராதாகிருஷ்ணன் அவர்கள் திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். அன்பு சகோதரர் T.ராதாகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நடிகர்களை கொண்டாடுங்கள்.. ஆனால், பாரதியை மறந்துவிடாதீர்கள்.. தமிழிசை அட்வைஸ்..

ABOUT THE AUTHOR

...view details