விருதுநகர்: திருச்சுழி அருகே நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மகாமூர்த்தி. இவரது மகன் தென்னரசு. இவர் அதிமுக ஒன்றிய விவசாய அணிச் செயலாளராகப் பதவி வகித்துவருகிறார்.
இவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் நடிகைகள், பெண்களின் புகைப்படங்களையும் ஆபாசமாகப் பதிவிட்டுள்ளார்.