அறிவிக்கப்பட இருப்பதாகக் கூறப்படும் உள்ளாட்சித் தேர்தலையொட்டி அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மற்றும் சாத்தூர் பகுதிகளில் நடைபெற்றது.
இதில், கலந்துகொண்ட தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளாட்சித் தேர்தலில் செயல்படவேண்டிய முறை குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
விருநகரில் முதலமைச்சர் தலைமையில் முப்பெரும் விழா பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், சாத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய மூன்று நகராட்சிகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சீவலப்பேரியை தலைமையிடமாகக் கொண்டு 444 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ள திட்டத்தையும் சேர்த்து முதலமைச்சர் தலைமையில் முப்பெரும் விழா உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்பு விருதுநகரில் கொண்டாடப்படும்’ என்றார்.
மேலும், மு.க. அழகிரி மற்றும் ரஜினிகாந்த் சந்திப்பு குறித்த கேள்விக்கு, அரசியலில் இல்லாதவர்கள் பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்தாது' - மு.க. ஸ்டாலின் சாடல்!