விருதுநகர்:விருதுநகர் அதிமுக இளைஞர் பாசறையைச் சேர்ந்த ராம்குமார், கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக நடந்துகொண்டமைக்காக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலக்குவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், ”கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானவகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், R. ராம்குமார்,விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.