விருதுநகர் அல்லம்பட்டி அண்ணா புதுத்தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல் ராஜன் (44). இவரக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் கட்டட கட்டுமான பொருள் விற்பனை, மனை வணிகம் (ரியல் எஸ்டேட்) தொழில் செய்துவந்தார்.
கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு அதிமுகவில் மாணவரணி அவைத்தலைவராக இவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு வீட்டிலிருந்து வெளியே வந்த சண்முகவேல் ராஜனை வீட்டு வாசலில் வைத்து ஏழு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடியது.