விருதுநகர் மாவட்டம் திரௌபதி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன் (51). இவரது நண்பர் முருக கணேஷ் (50). இருவரும் உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
பால் வேன் மோதிய விபத்தில் அதிமுக பிரமுகர் உயிரிழப்பு! - விபத்துச் செய்திகள்
விருதுநகர்: ராஜபாளையம் அருகே பால் வேன் மோதிய விபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் உயிரிழந்தார்.

அப்போது ராஜபாளையம் R56 பால் கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான பால் ஏற்றிச் செல்லும் வேன், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன் பலத்த காயமடைந்த நிலையில், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இவரது நண்பர் முருக கணேஷ் பலத்த காயங்களுடன் ராஜபாளையம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இது திட்டமிட்ட கொலையா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.