விருதுநகர் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவராகவும், தற்போதைய விருதுநகர் ஊராட்சி ஒன்றிய 12ஆவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் முருகேசன். இவர் விருதுநகர் அருகேவுள்ள நல்லமநாயக்கன்பட்டியில் வீட்டு தரையில் பதிக்கும் கல் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். வழக்கம்போல தொழிற்சாலைக்கு சென்றவர் அங்குள்ள மோட்டார் பழுது காரணமாக அதனை தாமாகவே சரிசெய்ய முயற்சித்துள்ளார்.
மின்சாரம் தாக்கி அதிமுக ஒன்றிய கவுன்சிலர் உயிரிழப்பு! - காவல்துறை விசாரணை
விருதுநகர்: நல்லமநாயக்கன்பட்டி அருகே தனது தொழிற்சாலையின் மின் மோட்டார் பழுதை சரிசெய்ய முயன்ற ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோட்டார் பழுது பார்த்த பின்பு மின்னிணைப்பு செய்யும்போது, மோட்டாரின் பாகங்கள் சரியாக இணைக்கப்படாததால் அதிகப்படியான மின்சாரம் பாய்ந்து மோட்டார் தூக்கி எறியப்பட்டு அவருடைய முகத்தில் பலமாக அடித்துள்ளது. இதில் படுகயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளிக்குடி காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.