தமிழ்நாட்டில் வாக்கு சேகரிக்க இன்றே கடைசிநாள் என்பதால், அரசியல் கட்சித்தலைவர்கள் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் நமது ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில்,
திமுக, அமமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்- அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் - dmk
விருதுநகர்: திமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் வரக்கூடிய இடைத்தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள் என சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் கூறியுள்ளார்.
சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சீவலப்பேரி தண்ணீரை கொண்டு வந்து குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும். சாத்தூர் பகுதியில் அதிகமாக இருக்கக்கூடிய பட்டாசு தொழிற்சாலைகளில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற அதிநவீன தீக்காய சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும்.
ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்களுக்கு வரி குறைப்பு செய்யப்படும். அனைவரும் கல்வி பயிலும் வகையில் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்த முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். வெம்பக்கோட்டை பகுதியில் அரசு நிலத்தில் அரசு தொழிற்கல்வி அமைக்கப்படும் எனக் கூறினார். இதைத்தொடர்ந்து பேசியவர், திமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் வரக்கூடிய இடைத்தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள். அதற்கு மக்கள் தயாராகி விட்டார்கள் என்றார்.