சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.கே. ரவிச்சந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரிக்க அதிமுக கொள்கைபரப்புத் துணைச் செயலாளர் விந்தியா சாத்தூரில் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், "தமிழினத் துரோகி ஸ்டாலின், அதிமுக துரோகி டிடிவி தினகரன். எல்லோரும் கட்சி ஆரம்பித்து அதன்பின்பு கொள்ளையடிப்பார்கள். ஸ்டாலின்போன தேர்தலில் நமக்கு நாமே என்று சொல்லிக் கொண்டு சுற்றித்திரிந்தார்" என்றார்.
தற்போது ’ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப் போறாரு' எனச் சுற்றிவருகிறார் எனத் தெரிவித்த விந்தியா, ஆனால் உண்மையில் 'ஸ்டாலின்தான் வராரு மக்களெல்லாம் உஷாரு' என்றுதான் அர்த்தம் எனப் பாட்டாகவே பாடி பரப்புரையில் ஈடுபட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ஸ்டாலின் கிராமசபைக் கூட்டம் என்று பொய்யான கூட்டத்தை நடத்திவருகிறார். மக்கள் ஏமாந்து விடாதீர்கள் என எச்சரிக்கைவிடுத்தார். இதில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:ஸ்டாலினால், என்னை நினைக்காமல் இருக்க முடியாது : அமைச்சரின் விளக்கம்