விருதுநகரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆன்லைன் வர்த்தக விளம்பரங்களில் நடிகர்கள் நடிப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஆன்லைன் வர்த்தகம் மூலம் சில்லறை வர்த்தகம் பாதிக்காமல் இ௫க்க மத்திய மாநில அரசுகள் ஆன்லைன் வர்த்தகத்தை முறைப்படுத்த வேண்டும். நம்மில் பலர் உணவு முதல் பெரும்பாலான தேவைகளுக்கு ஆன்லைனை சார்ந்தே இருக்கிறோம்.
நடிகர்கள் ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடிப்பது தவறில்லை: சரத்குமார் - அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
விருதுநகர்: நடிகர்கள் ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடிப்பது தவறில்லை, அதனால் சில்லறை விற்பனை பாதிப்பதாக நினைத்தால் சம்மந்தப்பட்ட நடிகரிடம் கோரிக்கை வைக்கலாம் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
Actor's acting in online trading issue
வர்த்தக சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா நடிகர்கள் ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடிப்பது தவறு என கூறி அவர்கள் உரிமையை தடுக்க முடியாது. ஏற்கனவே விளம்பரத்தில் நடிகர்கள் நடிக்கும் போது தவறான பொருட்களுக்கான விளம்பரத்தில் நடித்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் சட்டம் நடப்பில் உள்ளது. எனவே சில்லறை விற்பனை பாதிப்பதாக நினைத்தால் சம்மந்தப்பட்ட நடிகரிடம் கோரிக்கை வைக்கலாமே தவிர அவர்களை நடிக்கக் கூடாது எனக் கூற முடியாது என்றார்.